இந்துக்கள் கோவிலை இடிச்சி இருக்கேன்.. திமுக எம்.பி டி.ஆர் பாலு சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், அதற்கு தடையாக இருப்பதை நீக்க கூறியும் திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு கலந்து கொண்டே பேசினார். அப்போது பேசிய அவர் இந்துக்கள் கோவிலை இடித்துள்ளதாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் 100 வருட பழமையான கோயிலை நான் இடித்துள்ளேன். இதே டி ஆர் பாலு எங்கள் ஊரில் எனது தொகுதியில் சரஸ்வதி கோயில், லட்சுமி கோயில், பார்வதி கோயில் என 3 கோயில்களை நான் இடித்துள்ளேன்.

எனக்கு ஓட்டு வராது என்று தெரியும். ஆனால் ஓட்டை எப்படி வர வைப்பது என்று எனக்கு தெரியும். ஓட்டு வராது கோயிலை எடுக்காதீங்க என பலர் என்னிடம் கூறினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் இந்த வீடியோ எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP TR Balu temple controversy speech


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->