முரசொலி விவகாரத்தில் டாக்டர் ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக நோட்டிஸ்! பதிலடி கொடுக்குமா பாமக! - Seithipunal
Seithipunal


முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என முரசொலி சார்பில் அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது பூதாகரமாக வெடித்தது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளும் குற்றம்சாட்டின. பின்னர், பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் முரசொலி நிலம் குறித்துப் புகார் அளித்தார். பா.ஜ.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உடனடியாக முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உத்தரவின்படி தி.மு.க அமைப்பு செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி விசாரணை செய்ய அதிகாரம் இல்லை என சமாளித்தார். பொய்ப் புகார் அளித்தவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார் ஆர்.எஸ்.பாரதி.

இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.கவின் சீனிவாசன் ஆகியோருக்கு, முரசொலி அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், முரசொலி நிலம் தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு 48 மணிநேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரசொலி அலுவலக இடத்திற்கு ஆதரவாக பேச வந்த அனைவரும் மற்றவர்கள் எல்லாம் யோக்கியர்களா என்றும், வேறு எங்கும் பஞ்சமி நிலமே இல்லையா என்றும் தான் கேட்டார்களே தவிர... ஒரே ஒருத்தர் கூட முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்று தெரிவித்ததாக தெரியவில்லை. அதேபோல திமுகவும் அது தொடர்பான ஆதாரங்களை வைத்திருப்பதாக தெரியவில்லை. 

இந்த நிலையில் தான் டாக்டர் ராமதாஸ்க்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். சும்மாவே ட்விட்டரில் திமுகவை வறுத்தெடுக்கும் டாக்டர் ராமதாஸ் இதற்கு என்ன பதிலளிப்பாரோ என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP sent notice to PMK Founder Ramadoss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->