தேர்தல் இல்லாமலே ஆட்சி மாற்றம் என அறிவித்த ஸ்டாலின்! திமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு!   - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று தேர்தல் பிரசாரத்தில் முழங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அவர் சொன்னபடி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் வரவில்லை. 

ஆனால் தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வரும் என இன்று மீண்டும் பேசியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். சபாநாயகரை நீக்குவதைவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதே முக்கியம் என்று பேசியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். 

இந்நிலையில் வருகின்ற 28 ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக சட்டமன்ற கழககொறடா அர.சக்கரபாணி  அறிவைத்துள்ளார். இது வழக்கமான கூட்டமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.. 

அப்பறம் ஆட்சி மாற்றம் பற்றி ஏதேனும் தகவல்? இன்னுமா சார் இந்த உலகம் ....? 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mla meeting in anna arivalayam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->