டெல்லி புறப்படும் திமுக அமைச்சர்.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இடம் தேர்வு செய்யப்பட்டு, மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன் பிறகு ஒரு வருடம் கழித்து 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் மதுரைக்கு நேரடியாக வந்து மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இடம் தேர்வு செய்வதற்கு மூன்று ஆண்டுகள் உருண்டோடி நிலையில், அடிக்கல் நாட்ட ஒரு ஆண்டு ஆனது. தற்போது அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், கட்டுமானஇன்னும் தொடங்கவில்லை.

இந்நிலையில், மத்திய அரசிடம் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நேரடியாக சென்று முன்வைக்க, நாளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி புறப்படுகிறார். 

நாளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். 

மேலும், தமிழகத்திற்கு 2 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk minister ma su go to delhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->