திமுக அமைச்சரின் மருமகனை தட்டி தூக்கிய ஈபிஎஸ்..!! அதிர்ச்சியில் திமுக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். 

அந்த வகையில் இன்று சேலம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகியவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் சி.வி. கணேசனின் மருமகன் பொன்னர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் அமைச்சர் கணேசனின் மருமகன் பொன்னர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அதிமுகவில் இணைந்தார். 

இவர் திமுகவில் மாவட்ட இலக்கிய அணியின் துணை அமைப்பாளராக பதவி வகித்தவர். இந்த நிலையில் தற்பொழுது அதிமுகவில் இணைந்துள்ளார். இவர் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இதனால் திமுக தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Ganesan nephew joined AIADMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->