திமுகவினருக்கு பயந்து போலீசிடம் தஞ்சம் அடைந்த திமுக பெண் கவுன்சிலர்!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற திமுகவினரிடையே மல்லுக்கட்டு நடைபெற்று வருகிறது. பதவியேற்பு முடிந்தவுடன் ஆதரவு கவுன்சிலர்களை இரு தரப்பினர் போட்டிபோட்டு காரில் கொண்டு சென்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது. 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் 27 கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக 17, காங், 1,  அதிமுக 5, பாமக 1, சுயேட்சைகள் 3 பேர் என்று வெற்றிபெற்றுள்ளனர். மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் திமுகவில் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் தங்கள் மனைவிகளை ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட செய்து வெற்றிபெற செய்துள்ளனர். திமுக 17 இடங்களை கைப்பற்றியதால் திமுக தலைவர் பதவியை கைப்பற்றுவது உறுதியானது.

இதில் திமுக வடக்கு ஓன்றிய செயலாளர் இளையபெருமாள் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி ஆகியோர்களுக்கு இடையே ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற மல்லுக்கட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கி மதியம் 2 மணியளவில் பதவியேற்பு விழா முடிந்தது. விழா முடிந்து கவுன்சிலர்கள் வெளியில் வந்தனர். அப்போது திமுக கவுன்சிலர்களை சிலர் தலைவர் தேர்தலில் மாற்றிவாக்களித்து விடக்கூடாது என்பதற்காக ஆதரவு கவுன்சிலர்களையும் திமுகவினர் காரில் அள்ளிசென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது ஒரு பெண் கவுன்சிலர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளேயே இருந்துகொண்டு போலீசார் தன்னை பாதுகாப்பாக அழைத்துசென்று வீட்டில் விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அந்த பெண் கவுன்சிலரை போலீஸ் ஜீப்பில் பாதுகாப்பாக போலீசார் அனுப்பி வைத்தனர். திமுக, அதிமுகவினரிடையே தலைவர் பதவிக்கு கவுன்சிலர்கள் அள்ளிச்செல்வது போய் மயிலாடுதுறையில் திமுகவினரின் உள்கட்சி பூசலால் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்களையே அள்ளிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செய்தியாளர் : மணி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mayiladuthurai councilor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->