அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி - அதிரடியாக நிறைவேறிய தீர்மானம்!  - Seithipunal
Seithipunal



திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதிக்கு 'துணை முதலமைச்சர்' பதவி வழங்க வேண்டும் என்று, கேரள மாநில திமுகவினர் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருப்பது, பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கோவளம் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று கேரளா மாநில திமுக சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கேரள மாநில திமுக அமைப்பாளர் கே ஆர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த தீர்மானத்தின் படி, 'திமுகவின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று, கேரள மாநிலத் திமுக சார்பாக வலியுறுத்துகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்களின் விவரங்கள் :

* ஒரு வருடத்திற்குள் கேரளாவின் 14 மாவட்டங்களில் கருணாநிதியின் சிலையை நிறுவ வேண்டும்.

* கேரள உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் கேரள திமுக சார்பாக தலைமை கழகத்தின் அனுமதி பெற்று போட்டி.  

* கேரள மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையில் ஹிந்தி மொழியை கட்டாயமாக்கக்கூடாது என்று மத்திய அரசு அலுவலகங்களில் முன்பு ஆர்ப்பாட்டம்.

* நீட் தேர்வு எதிர்த்து கேரள மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, கேரளா தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Kerala UdhayaniDhi Vice CM


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->