வட மாவட்டமா? அதுவும் அந்த தொகுதியா? கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக!  - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தையை இன்று திமுக தலைமை தொடங்கி உள்ளது.

முதல் கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று காலை முதல்கட்டமாக பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இன்று மாலையும் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் வெளியான அந்த தகவல் நமக்கு தெரிவிக்கின்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகி உடன், திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று காலை முதல் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளார்.

இன்று மாலை திமுகவின் தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் வட மாவட்டங்களில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அதே சமயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு தங்களது விருப்பத்தை தெரிவிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK IUML alliance meet start 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->