பாஜகவை முந்திக்கொண்ட திமுக! அக்.1ல் சம்பவம் இருக்கு! துரைமுருகனின் முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 1ம் தேதி அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துறைமுருகன் அறிவித்துள்ளார். 

காணொளி வாயிலாக நடைபெறும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழக முதல்வர் திமுக தலைவர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட பகுதி பார்வையாளர்கள் கலந்த யோசனைக் கூட்டம் 01-10-2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணியளவில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் வரும் அக்டோபர் 3ம் தேதி சென்னை கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவை முந்திக்கொண்டு தற்போது அக்டோபர் 1ம் தேதி திமுகவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK district secretaries meeting on October1


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->