திமுக தொடர்ந்த வழக்கு.. அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில், 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது பதிவான வாக்குகள் கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

வாக்கு எண்ணிக்கையை வீடியோவாக பதிவு செய்யவேண்டும் என திமுக வழக்கு தொடந்து. அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை வீடியோவாக பதிவு செய்தது தேத்தல் ஆணையம்.

சில நாட்கள் முன்பு உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவில் முறைகேடு நடந்து இருப்பதாக திமுக வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவில் முறைகேடு செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

CCTV கேமரா பதிவுகள் மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வழக்கு விசாரணைக்கு பிறகு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தொடுத்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk case finishing to high court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->