ஒருபுறம் மகளிர் உரிமை மாநாடு! மறுபுறம் பெண் காவலருக்கு மிரட்டல்!! இது தான் திராவிட மாடலோ? - Seithipunal
Seithipunal


மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பகுதியில் கடந்த டிசம்பர் 31ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் திமுக இளைஞரணியை சேர்ந்த பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் பிடித்து விசாரணை நடத்தியபோது இருவரும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இதனால் திமுக பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதை கவனித்த திமுக எம்எல்ஏ பிரபாகரன் ராஜா பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் பெண் காவலர்களிடம் அநாகரிமாக நடந்து கொண்ட இருவரையும் எச்சரித்து விடுவித்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனை அடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மீது பெண் காவலர் புகார் அளிக்க திமுக எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலரின் அழுத்தத்தின் காரணமாக அவர் தனது புகாரை வாபஸ் பெற்றதோடு நீண்ட நாள் விடுப்பில் சென்றார். 

திமுகவுக்கு அரசியல் ரீதியில் நெருக்கடி ஏற்பட்டதால் தமிழக டிஜிபியின் நேரடி தலையிட்டுக்குப் பிறகு திமுக நிர்வாகிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் பெண் காவலரை அவர் பணியாற்றும் காவல் நிலையத்திற்கே சென்று திமுகவினர் மிரட்டியுள்ளனர். 

இன்று நடைபெறும் விசாரணையின் போது சாட்சியம் அளிக்கக்கூடாது எனவும், இந்த வழக்கினை வாபஸ் பெற வேண்டும் எனவும் திமுகவினர் மிரட்டி உள்ளனர். திமுக சார்பில் இன்று பெண்ணுரிமை மாநாடு நடைபெறும் நிலையில் திமுகவினரால் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் காவலரை காவல் நிலையம் புகுந்து மிரட்டியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் மகளிர் உரிமைக்கான மாநாட்டை நடத்தும் திமுக, மறுபுறம் பெண் காவலரை காவல் நிலையத்தில் புகுந்து மிரட்டுகின்றனர். இதுதான் திராவிடம் மாடலா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK cadres threatened woman police demand withdraw sexual harassment case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->