உள்ளே நுழையந்த 4 பேர்.,  அய்யோ அம்மா போச்சே., கத்தி கதறிய விசிக-திமுக.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது. மே மாதம் இரண்டாம் தேதி காலை எட்டு முப்பது மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அன்று ஞாயிறு தினம் என்பதால் நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடு  விதிமுறைகளின்படி அன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதரபட்டு அரவிந்தர் இன்ஜினியரிங் கல்லூரி கல்லூரியில் கல்லூரியின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரி வளாகத்தில் மூன்று பணி சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசியல் கட்சி நிர்வாகிகள் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட வளாகத்திற்குள் சென்றுள்ளனர். இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சி எம்.பி., ரவிக்குமார் தலைமையில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரிடம் அனுமதி இன்றி எதற்காக இந்த நான்கு பேரை உள்ளே அனுமதித்தார்கள்? எங்களுக்கு இதில் சந்தேகம் எழுந்து உள்ளது. இது கள்ள ஓட்டு போடுவதற்கும், வாக்கு எந்திரத்தை மாற்றுவதற்கும் வழிவகுக்கும். இதில் ஏதோ சதி நடக்கிறது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருவழியாக பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர் .இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk and vck members protest in election counting both


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->