பாஜகவுடன் திமுக ரகசிய கூட்டணி- செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி.! - Seithipunal
Seithipunal


இன்று திருமலை நாயக்கரின் 439-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருமலை நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

அப்போது பேசிய அவர் திமுக அமைச்சரவையில் நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் 6 அமைச்சர்கள் உள்ளனர். இருப்பினும் ஒரு அமைச்சர் கூட இங்கு வந்து நாயக்கர் மன்னர் சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பேசிய இவர் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படாதற்கு நிறைய காரணங்கள்  உள்ளன என்றும் உலக அளவில் பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை பறைசாற்றி உள்ளார் எனவும் கூறினார். மேலும், பாஜகவுடன் ஸ்டாலினுக்கு ரகசிய உறவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK and BJP hide alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->