பா.ஜ.கவுடன் கூட்டணி பேச்சை துண்டித்தது தே.மு.தி.க.!! - Seithipunal
Seithipunal


தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கியது முதல் தேமுதிக தரப்பு மக்களவை சீட்டுடன் மாநிலங்களவை சீட் கேட்டதால் பாஜக மற்றும் அதிமுக தரப்புகளுக்கு இடையே மேற்கொண்டு வந்த பேச்சு வார்த்தை இழுபறியில் இருந்தது. 

இந்த நிலையில் நேற்று மக்களவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேமுதிக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று விட்டதாகவும் தொகுதி பங்கிடும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 

ஆனால் அதனை மறுத்து உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்னும் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை எனவும் செய்தித்தாள்களில் மற்றும் ஊடகங்கள் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். 

இத்தகைய சூழலில் பாஜக உடனான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தேமுதிக தரப்பு நிறுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக ஒரு மாநிலங்களவை உறுப்பினருடன் 7 மக்களவை சீட்டை தேமுதிக கேட்பதாக பாஜக திறப்பு கூறிவந்த சூழலில் தற்போது பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ளது தேமுதிக தரப்பு. 

இதன் மூலம் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. மேலும் இன்று அல்லது நாளைக்குள் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmdk stopped alliance talk with BJP


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->