ஈரோடு இடைத்தேர்தல் | தேமுதிக சார்பில் 5 பேர் தலைமையில் 168 பேர் களமிறக்கும்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில், இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தனது வேட்பாளரை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு தொடங்க்க உள்ளது.

இந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது" என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து, தேமுதிகவின் வேட்பாளராக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் அவர்களை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற 168 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவின் துணைச் செயலாளர் அக்பர் தலைமையில் ஒரு குழுவாகவும், தேமுதிகவின் துணைச் செயலாளர் எல் கே சதீஷ் தலைமையில் குழுவையும் தேமுதிக அமைத்துள்ளது.

மேலும், தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் தலைமையில் ஒரு குழுவையும், தேமுதிக அவை தலைவர் இளங்கோவன் தலைமையில் குழுவையும், தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் ஒரு குழுவையும் தேர்தல் பணிக்காக தேமுதிக அமைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK Candidate election campaign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->