போதை பழக்கத்தால் சிக்கி சீரழிந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகரின் குடும்பம் - இயக்குனர் அமீர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


போதைப் பொருளின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று, திரைப்பட இயக்குனரும், நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது, "கல்லூரிக்கு செல்லும் ஒரு மாணவன் போதை பழக்கம் இல்லாமல், படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அந்த மாணவன் என்ன படித்து முடித்து விட்டு வருகிறான் என்பது விஷயமே இல்லை. போதையில் இருந்து இந்த மாணவனை காப்பாற்ற வேண்டியதே பெரிய துயரமாக இருக்கிறது.

இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் கட்சி பிரமுகரின் குடும்பம் கூட, இந்த போதை விவகாரத்தில் சிக்கி சீரழிந்து இருப்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது உங்களுக்கே தெரியும்.

இதனை தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசு சட்டம் போட்டு இதற்கு நடவடிக்கை எடுத்தால் கூட, அந்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு மாற்றாக ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட மற்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

எம்ஜிஆர் காலத்தில் உள்ள திரைப்படங்களில் ஒருவர் மது அருந்தினால், அதனை தடுப்பதற்கு ஐந்து எம்ஜிஆர் வருவார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் திரைப்பட கதாநாயகர்களே மது குடிப்பது, போதை பொருள் பயன்படுத்துவது மகிழ்ச்சியான செயலாக காட்டுவது ஆபத்தானது. என்னுடைய தனிப்பட்ட முறையில் மதுவுக்கு எதிராகவே என்னுடைய குரல் எப்போதும் இருக்கும்" என்று இயக்குனர் அமீர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Amir Say About No Drunks


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->