பழைய ரூ.500, 1000 நோட்டுகள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று, மத்திய அரசு பணமதிப்பு நீக்கம் செய்து அறிவித்தது. 

இந்த தீடிர் அறிவிப்பால் மக்கள் ஆரம்பத்தில் பெரும் இன்னலுக்கு ஆளாக்கினாலும் பின்னர் நிலைமை சரியாகியது. மேலும், செல்லாத இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள குறிப்பிட்ட கால அவகாசமும் தரப்பட்டது.

இதற்கிடையே கடந்த வருடம், செல்லாத இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள, மேலும் ஒரே ஒருமுறை மட்டும் வாய்ப்பு அளிக்க மத்திய அரசுக்கு வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷியான் திவான் எடுத்துவைத்த வாதங்கள் முடிவடைந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் தற்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், "2016 – 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தேசிய பொருளாதார கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 

2016 -ல் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டபோது, செல்லாத இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான தனிப்பிரிவு கொண்டுவரப்பட்டது. 

அதனை மீண்டும் திறக்க இயலாது. அப்படி திறக்கும் பட்சத்தில், அது முடிவில்லா தன்மைக்கும், சட்டவிரோதப் பணம் உள்ளே நுழையவும் வழிவகுக்கும்." என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Demonetization case SC 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->