தங்கமே தங்கம்., 13 வயதில் தங்கம் வென்ற குழந்தைக்கு மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து.!  - Seithipunal
Seithipunal


இந்திய அரசியல் தலைவர்களில் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் இராமதாஸ் அவர்கள், இன்று ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 13 வயது ஜப்பான் சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்துச்சண்டை 49 கிலோ பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுக்கொடுத்த மீராபாய் சானு அவர்களுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய தலைவர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "டோக்கியோ ஒலிம்பிக்கின் 49 கிலோ எடை பிரிவினருக்கான வலுதூக்கும் போட்டிகளில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வெள்ளி மங்கை மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள். 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கத்துடன் பதக்க வேட்டையை தொடங்கியிருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. இந்திய அணியினர் மேலும் பல பதக்கங்களை குவிக்க வாழ்த்துக்கள்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவர் இராமதாஸ் அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 13 வயது குழந்தைக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

"தங்கமே தங்கம்! டோக்கியோ ஒலிம்பிக்கில் "ஸ்கெட் போர்டிங்" (street skate boarding) போட்டிகளில் தங்கம் வென்ற ஜப்பானின் 13 வயது குழந்தை மோமிஜி நிஷியா, வெள்ளி வென்ற பிரேசிலின் 12 வயது குழந்தை ரைசா லியால், ஜப்பானின் 16 வயது வெண்கல மங்கை  நகாயாமா ஆகியோருக்கு வாழ்த்துகள்." என்று மருத்துவர் இராமதாஸ் பாராட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

D Ramadoss wish to Olympics 2021 Gold won child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->