கொள்ளைக்காரன்! சபரீசன்-ஓபிஎஸ் சந்திப்பு பின்னணியின் மர்மம் - சிவி சண்முகம் பகீர் பேட்டி! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தாவது, "ஓபிஎஸ் இன்றைக்கும் சரி, என்றைக்கும் சரி திமுகவின் கைக்கூலியாக தான் இருந்துள்ளார். அவர் திமுகவின் ஏஜென்ட்.

சபரீசன் எங்கே? சபரீசன் எங்கே? என்று உலகமே கேட்ட போது, அவர் லண்டனில் ஒளிந்து கொண்டார். சென்னை வந்ததும் நேராக யாரை போய் ஒரு கொள்ளைக்காரனை பார்க்கிறார்.

'அவர்களின் தாத்தாவையே மிஞ்சி முப்பது ஆயிரம் கோடியை உதயநிதி ஸ்டாலினும், சபரிசனும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதை எங்கே முதலீடு செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று  நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் சொன்னால் அது தவறு. அதே கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர் தியாகராஜன் சொல்கிறார்.

அதன் பிறகு நடத்தப்பட்ட வருமான வரி முடியும் வரை, லண்டனில் இருந்து வராத சபரீசன், வருமான வரி சோதனை முடிந்தவுடன் நேரடியாக சென்னை வருகிறார். 

வந்தவுடன் சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்கிறார். எஸ்எம்கே என்ற சாராய கம்பெனியின் விளம்பர பணியினை உடுத்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அவர் இருந்தது இரண்டாவது பிளாக்கில், ஓ பன்னீர்செல்வம் இருந்தது ஒன்பதாவது பிளாக்கில். அப்போது கூட பாருங்கள் கலைஞரின் ப்ளாக்கை தேடி தான் சென்றிருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.

கலைஞர் மீது அவருக்கு அவ்வளவு விசுவாசம், பாசம் பொங்கிக் கொண்டிருக்கிறது. துரைமுருகனை விட விசுவாசம் மிக்க திமுக தொண்டன் யார் என்றால் ஓபிஎஸ் பச்சோந்தி தான். 

ஒன்பதாவது பிளாக்கில் இருந்த ஓ பன்னீர்செல்வம், இரண்டாவது பிலாக்கில் இருந்த சபரீசனை சந்தித்து பேசியதற்கான காரணம் என்ன? 

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்துவதற்காக திமுகவின் ஏஜெண்டான ஓ பன்னீர்செல்வத்திற்கு அறிவுறுத்துவதற்காகவே இந்த சந்திப்பு அரங்கேறி உள்ளது.

ஓபிஎஸ் மீதும், அவரின் மகன் மீதும், அவர் சேர்த்து வைத்திருக்கின்ற சொத்துக்களுக்கு எந்த ஆபத்தும் வராமல், வழக்குகள் பதியப்படாமல் இருப்பதற்காகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது. மீண்டும் கொள்ளை அடிப்பதற்கு உண்டான ஆலோசனையை தான் அவர்கள் செய்து உள்ளார்கள்" என்று சிவி சண்முகம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CVS say about OPS SABS meet


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->