விழுப்புரத்தை நாசமாக்கும் கள்ளச்சாராயம்.. பின்னணியில் திமுக அமைச்சர்.. பகீர் கிளப்பும் சி.வி சண்முகம்..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட நபர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ள சாராயத்தால் உயிரிழந்ததற்கு முழுக்க முழுக்க காவல் துறையினரின் மெத்தென போக்கு தான் காரணம். விழுப்புரம் மாவட்டத்தில் பாக்கெட் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. இது மறைமுகமாக விற்பனை செய்யப்படவில்லை வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகிறது.

இது காவல்துறைக்கும் தெரியும், காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கும் தெரியும். காவல்துறையால் இந்த குற்ற சம்பவங்களை தடுக்க முடியும். ஆனால் காவல்துறையை செயல்படாமல் முடக்கியது யார்.? விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற கள்ள சாராயம், போதை மருந்து விற்பனை, போதை சாக்லேட் விற்பனை, இதனால் ஏற்படுகின்ற இளம் சிறார்கள் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டு அமைச்சர்களின் குடும்பங்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பாக்கெட் சாராயங்களை விற்பனை செய்வது யார் என்பது காவல்துறையினருக்கு நன்றாக தெரியும். திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பாக்கெட் சாராயம் விநியோகம் செய்யப்படுகிறது. திண்டிவனம் நகரம் 20வது வார்டு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு திமுக பெண் கவுன்சிலரின் கணவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கிலோ கணக்கில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். தற்பொழுது 20 நாட்களுக்கு முன்பாக அவரது வீட்டில் இருந்து 5000 லிட்டர் சாராயம், அதை தயாரிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்தனர். ஆனால் அவர் மீது சிறிய வழக்கு பதிவு செய்து போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். 

திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் கள்ள சாராயத்தை தயாரித்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்கிறார். அவர் மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைதானவர். அவரை காவல்துறையினர் உடனடியாக விடுதலை செய்கின்றனர். யாருடைய அழுத்தத்தின் பேரில் விடுதலை செய்யப்படுகிறார். எந்த அமைச்சர் இந்த தொழில் செய்வதற்கு அவருக்கு உடந்தையாக உள்ளார் என்பது இந்த காவல்துறைக்கு தெரியாதா.? உளவுத்துறைக்கு தெரியாதா? 

எதற்கு இந்த முதலமைச்சர்..? அவரின் கீழ் எதற்கு இந்த மானங்கெட்ட உளவுத்துறை..? ஒரு திமுக பெண் கவுன்சிலரின் கணவர் கஞ்சா விற்கிறார், சாராயம் இருக்கிறார், வீட்டிலேயே சாராயத்தை தயாரிக்கிறார், மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்கிறார். அந்த பாக்கெட் சாராயத்தை அருந்தியதால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cve Shanmugam alleges DMK minister behind counterfeit liquor sales


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->