அடுத்த ட்விஸ்ட்... ஓபிஎஸ்.,க்கு தடை விதிங்க... தேர்தல் ஆணையரை சந்திக்கும் சி.வி சண்முகம்...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் நேற்று மாலை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசினார்.

அதன் பிறகு இன்று காலை அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஜி.கே. வாசனை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுக கூட்டணியின் வெற்றி தான் முக்கியம் என ஜி.கே வாசன் பேசியிருந்தார்.

இதனிடையே இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் அதிமுக பொழுதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் முடிவெடுக்காத நிலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுக மாநிலங்களில் உறுப்பினருமான சி.வி சண்முகம் வரும் ஜன.25ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளார் என்ற தகவல் அதிமுக வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது அதிமுக சின்னம் மற்றும் பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலை கருத்தில் கொண்டு ஈபிஎஸ் தரப்பினர் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜனவரி 30 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேப்பமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகத்தின் இந்த சந்திப்பு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CV Shanmugam to meet Election Commissioner to dare OPS to use AIADMK party name


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->