"முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் - திமுக எம்பி கனிமொழி பேட்டி! - Seithipunal
Seithipunal


முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பல முதலீடுகளை ஈர்த்துள்ளது நிதர்சனமான உண்மை எனவும், முதல்வரின் வெளிநாட்டு பணத்தை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சி என்ன திமுகவின் தூத்துக்குடி எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக மகளிர் அணி செயலாளர் பவானி கணேசனின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. விழாவில் திமுக எம். பி கனிமொழி கலந்து கொண்டார்.

விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் திமுக எம்பி கனிமொழி.

செய்தியாளர் சந்திப்பில் திமுக எம்பி கனிமொழியிடம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்ற முதல்வரின் வெளிநாட்டு பயணம் முதலீடுகளை ஈர்க்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. 

கேள்விக்கு பதில் அளித்த திமுக எம். பி கனிமொழி, "காழ்ப்புணர்ச்சியில் வரும் பேச்சுக்கள் தான் அது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் பல முதலீடுகளை ஈர்த்து வருகிறது என்றுதான் நிதர்சனமான உண்மை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்கிறது." என திமுக எம். பி கனிமொழி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Criticism of CMs foreign trip is vandalism of people with unfulfilled dreams DMK MP Kanimozhi


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->