40லும் தனித்து போடியிட ஆசை.!! தகுதியும் எங்களுக்கு இருக்கு.. CPI முத்தரசன் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக நிறைவு பெற்றதாக இரு தரப்பும் அறிவித்துள்ள நிலையில் அதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் "கடந்த 2019 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது.

கடந்த முறை போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற உள்ளோம். 

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட எங்களுக்கு ஆசை தான். அதற்கான தகுதியும் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் கூட்டணி தர்மத்தின் படி திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறவுள்ளோம்" என பேசி இருப்பது கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் பிப்ரவரி 3ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் இவ்வாறு கூறியிருப்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPI contest alone in 40 constituency in tn


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->