ஓபிஎஸ்.,க்கு என்னதான் ஆச்சு.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கை.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

இருப்பினும் இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் இருந்தோ, மருத்துவமனை தரப்பில் இருந்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், லேசான கொரோனா தொற்று அறிகுறிகளுடன் ஓபிஎஸ் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அதில், கொரோனா அறிகுறியுடன் அவர் 15 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் என்றும், ஓபிஎஸ் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், "கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona admk o paneerselvam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->