நிறைவேற்றப்பட்ட சட்டம்! நாடு தழுவிய போராட்டத்துக்கு களமிறங்கிய காங்கிரஸ்! - Seithipunal
Seithipunal


வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பபட்டன. 

இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

இதற்கிடையே இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் மூத்தத் தலைவர் ஏ.கே. அந்தோணி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 24-ந்தேதி நாடு தழுவபிய அளவில் போராட்டம் நடைபெறும் என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress protest announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->