10 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையில் களமிறங்கும் காங்கிரஸ் - கொண்டாட்டத்தில் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் என மொத்தம் 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், தி.மு.க. 3 முறையும், சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் ஞானதிரவியம் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஒதுக்கி உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நெல்லை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையொட்டி கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress participate nellai constituency in parliment election after 10 years back


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->