அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆஜர்.!! - Seithipunal
Seithipunal


சீனர்களுக்கு விசா வழங்கிய மோசடி வழக்கு தொடர்பாக  டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக ஆஜரானார். பஞ்சாப் மாநிலத்தில்  சீன நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா குழுமம் மின் திட்டத்தைச் செயல்படுத்தியது. இதற்காக சீனாவை சேர்ந்த 263 பேரை இந்தியாவுக்கு அழைத்துவர விதிகளை மீறி விசா பெற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு வேதாந்தா குழுமம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது.


இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் சமீபத்தில் விசா மோசடி வழக்கில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று விசாரணைக்காக ஆஜரானார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP Karti Chidambaram appeared in ED office


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->