சிவகங்கை பாஜக வேட்பாளர் மீது காங்கிரஸ் மோசடி புகார்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேவநாதன் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புகார்‌ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் "வேதநாதன் அளித்துள்ள காசோலை 4 மாதமாக வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பி வந்துள்ள நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட B படிவத்தில் எப்படி அண்ணாமலை கையெழுத்திட்டார்? 

நிதி மோசடி செய்துள்ள பாஜக வேட்பாளர் வேதநாதனை, அண்ணாமலையும் தமிழிசையும் பாதுகாக்கக் கூடாது‌" என‌ தெரிவித்துள்ளார். 

மேலும் சென்னை மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்தில் மோசடி நடைபெற்றுள்ளதால் சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவின் சொத்துக்களை தமிழ்நாடு அரசு முடக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் வலியுறுத்தி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress fraud complaint against BJP candidate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->