காமன்வெல்த் போட்டி : டாப் டென் பதக்க பட்டியலில் நம் இந்தியா அணி.! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் போட்டி : நம் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. 

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மொத்தம் 72 நாடுகளைச் சோ்ந்த 5000-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள்  பங்கேற்றுள்ளனா். 

நம் இந்தியா தரப்பில் 215 போ் கொண்ட அணி கலந்து கொண்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 4 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. 

பதக்கங்கள் விவரம் : 

* பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.

* பளுதூக்குதல் போட்டியின் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி, 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* பளுதூக்குதல் ஆடவா் 55 கிலோ பிரிவில் சங்கட் சா்காா் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* பளுதூக்குதல் 61 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரா் குருராஜா பூஜாரி மொத்தம் 269 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றாா். 

காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 8வது இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தில் 32 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியாவும், 13 பதக்கங்களுடன் நியூசிலாந்து 2வது இடத்திலும், இங்கிலாந்து 3வது இடத்திலும் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

commonwealth 2022 medal list


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->