குழந்தைகள் கடத்தல் வழக்கில்., குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!!   - Seithipunal
Seithipunal


கோவை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் 10 வயது மகள் மற்றும் 7 வயது மகனும் தனியார் வேனில் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி வழக்கம் போல இரு குழந்தைகளையும் வேனில் அழைத்து சென்ற வேன் ஓட்டுநரான மோகன்ராஜ். இரு குழந்தைகளையும் கடத்தி வைத்து கொண்டு குழந்தைகளின் தந்தையான ரஞ்சித்திடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளன்.

இதையடுத்து, ரஞ்சித் பதறியடித்து கொண்டு கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்கு பதிவு செய்து குழந்தைகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில். பொள்ளாச்சி பி.ஏ.பி. வாய்க்காலின் கரையில், குழந்தைகள் இருவரின் பள்ளிப் பைகள், டிபன் பாக்ஸ் உள்ளிட்டவை கிடைத்தன. இதனைத் தொடர்ந்து மறுநாள் வாய்க்காலில் குழந்தைகள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

காவல் துறை நடத்திய விசாரணையில் இரு குழந்தைகளையும் வேன் ஓட்டுநர் மோகன் ராஜ் கடத்திக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வேன் ஓட்டுநர் மோகன் ராஜையும், அவனுக்கு உடந்தையாக இருந்த மனோகரனையும் போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் போலீசார் விசாரணைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற போது காவல் ஆய்வாளர் ஒருவரின் துப்பாக்கியை பறித்த வேன் ஓட்டுநர் மோகன்ராஜ் போலீசாரை சுட்டுவிட்டு தப்பிக்க முயன்ற போது போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தான்.

இதையடுத்து, இரு குழந்தைகளின் கொலைக்கு உதவிய மனோகரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம் மனோகரனுக்கு தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. தூக்குத் தண்டனைக்கு எதிராக மனோகரன் சென்னை உயர்நீதிமன்றதில் மேல் முறையீட்டு செய்தான். மேல் முறையீட்டு மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. 

சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்ததையடுத்து அதற்கு  எதிராக மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். இந்த மனுவை நீதிபதி நாரிமன் விசாரித்து வந்த நிலையில் மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbature two children kidnap case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->