90 இலட்சம் தடுப்பூசிகள்., மத்திய அரசுக்கு அவசர கடிதம் எழுதிய முதலவர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, கால்நடைகளுக்கு 90 இலட்சம் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று, மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டிற்கு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய்-கடந்த செப்டம்பர் 2022-ல் வழங்கவேண்டிய  தடுப்பூசி மத்திய அரசால் இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரித்திடவும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்திடவும், 

தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 இலட்சம் தடுப்பூசியினை விரைந்து வழங்கிட வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா அவர்களுக்கு இன்று (17-12-2022) கடிதம் எழுதியுள்ளார்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Letter to Central Govt 171222


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->