சிதம்பரம், விழுப்புரம்.. இவர்கள் தான் "வி.சி.க வேட்பாளர்கள்".!! பரபரக்கும் அரசியல் களம்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இரண்டு தனி தொகுதி மற்றும் ஒரு பொது தொகுதி ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆரம்பத்தில் முரண்டு பிடித்தது. 

அதன் பிறகு திமுக தலைவர் மு க ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரடியாக சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதன்பிறகு திமுக தேர்தல் தொகுதி பங்கிட்டு குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 

அந்த பேச்சு வார்த்தையின் முடிவில் திமுக கூட்டணியில் விசிகவிற்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ள சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தான தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும், போட்டியிட்ட நிலையில் மீண்டும் அவர்களை போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram Villupuram Vck candidate list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->