நடிகை ஜான்வி கபூர் குத்துவிளக்கேற்றிய தி நகர் கடையில் வருமான வரித்துறை சோதனை! - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவில் புடவைகளின் முன்னணி சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றான சில்க்ஸ் (கலாமந்திர்) லிமிடெட், அதன் 52வது கடையும், 4வது "காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ்" ஸ்டோரை, சென்னையில் தொடங்கியுள்ளது. 

அண்மையில் தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள பரபரப்பான ஷாப்பிங் ஏரியாவில் நடிகை ஜான்வி கபூர்,  "காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ்" ஸ்டோரை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

12000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட இந்த துணி கடையில், பனாரசி, பட்டோலா, கோட்டா, காஞ்சிபுரம், பைதானி, ஆர்கன்சா மற்றும் குப்பதம் போன்ற பல்வேறு வகையான புடவைகள் உட்பட, பிரீமியம் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனத்தின் இயக்குனர் மோகன் சலவாதி அடுத்த 3 ஆண்டுகளில் 100 கடைகளாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக்க தெரிவித்து இருந்தார்.

இந்த கடையில் விற்பனை செய்யப்படும் வரமஹாலக்ஷ்மி புடவைகள் சுமார் ரூ.4,000 முதல் ரூ.250,000 வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சாய் சில்க்ஸ் கலா மந்திர் குழுமத்தின் 60 இடங்களில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மட்டுமல்லாமல் வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் உள்ள இந்த நிறுவனத்தின் 60 துணிக்கடைகளில் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தி நகர், காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வரலட்சுமி கடைகளில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாண்டி பஜாரில் உள்ள இந்த காஞ்சிபுரம் வராமஹாலட்சுமி துணிக்கடையில், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai IT Raid in T Nagar Dress Shop 252023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->