#சென்னை || ஐஐடி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.! வெளியான அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


சென்னை ஐஐடி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை அதிகாரியாக, கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுப்பிரமணியம் தற்போது நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி யில் பல மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை ஐ.ஐ.டி யில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு படித்து வந்த போது, உடன் படித்த மாணவர் பாலியல் தொந்தரவு கொடுத்து கொடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சென்னை ஐஐடி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை அதிகாரி சற்று முன்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது விசாரணை அதிகாரியாக கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுப்பிரமணியத்தை சென்னை மாநகர காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக மயிலாப்பூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி விசித்திரா நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai IIT Student Harassment case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->