சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்றம்? மாநிலங்களவையில் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


இன்று மாநிலங்களவையில் சென்னை உயர்நீதிமன்றம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் வைகோ பேசியவை, இந்தியாவில் பல நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலத்தின் பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் என்பது மாற்றப்பட்டு தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்பட வேண்டும்.

தமிழக வழக்கறிஞர்கள் சங்கம் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உச்சநீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழி ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்தும், அதில் மாற்றங்கள் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்திய அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு விவரிக்கிறது. 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் ஆங்கிலத்தோடு, இந்தியும் நீதிமன்ற மொழியாக உள்ளது. குஜராத், கர்நாடகா மற்றும் சண்டிகர் மொழிகளில் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நோக்கத்தோடு, உச்ச நீதிமன்றம் தீர்ப்புகளை எல்லாம் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கில மொழியெடு, தமிழ் மொழியும் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமனறத்தில் 2006 ஆம் ஆண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதன் பின்னர் உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தோடு அந்தந்த மாநில மொழிகளையும் வழக்காடு மொழியாக மாற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court name change for parliament


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->