கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடு புகார்., சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கூட்டுறவு சங்க தேர்தல்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, விரிவான விசாரணை நடத்த திமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்,

"முறையாக தேர்தலை நடத்தாமல் அதிமுக நிர்வாகிகளை கூட்டுறவு சங்க நிர்வாகிகளாக நியமித்து உள்ளதாகவும், சுமார் 900 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்" என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc order to tn govt july 15


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->