செந்தில் பாலாஜி வழக்கில் ED-க்கு முட்டு கட்டை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கின் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதற்கிடையே நேற்று செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து அவசரமாக மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில் தங்கள் தரப்பிலிருந்து கூடுதல் வாதங்களை வைக்க உள்ளதால் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜியின் புதிய மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் அமலாக்கத்துறை இந்த மனு மீது பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் வழக்கில் தீர்ப்பு வெளியாவது தள்ளிப் போய் உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai court directed Ed response in senthilbalaji petition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->