தள்ளிவைக்கப்பட்ட மறைமுக தேர்தல் அறிவிப்பினை வெளியிட்ட ஆட்சியர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ஆம் தேதி தங்களது பதவிகளை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களையும், 9624 கிராம ஊராட்சி துணை தலைவர்களையும் தேர்வு செய்வதற்க்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர் பதவிக்கு இன்று காலை 11 மணிக்கும் மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் மதியம் 3.30 மணி அளவில் நடைபெறுகிறது.  

ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ள உறுப்பினர்கள் மட்டுமே இன்று நடைபெறும் மறைமுக தேர்தலில் வாக்களிக்க முடியும். மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அந்தந்த மாவட்ட திட்ட அதிகாரிகள் தலைமையில் இரண்டு அதிகாரிகள் கொண்ட குழு நடத்தும். 

ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களை மாவட்ட வளர்ச்சி அதிகாரி தலைமையிலான குழு நடத்தும். இந்த தேர்தலில்போட்டியிட விரும்புவோர், தங்களது பெயர்களை அதிகாரிகள் குழுவிடம் பதிவு செய்ய வேண்டும். அதிகாரிகள் அவர்களின் பெயர்களை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டில் அகர வரிசைப்படி எழுதிக் கொள்வார்கள். அந்த வாக்குச்சீட்டுகள் வாக்களிக்க தகுதி பெற்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும். அதனை பெற்றுக் கொண்ட உறுப்பினர்கள், தங்களுக்கு விருப்பமானமானவரின் பெயருக்கு நேராக பேனா மூலம் தேர்வு குறியிட வேண்டும்.

பின்னர் உறுப்பினர்கள் அந்த வாக்குச்சீட்டை வாக்குப் பெட்டியில் போட வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்த பின் அந்த வாக்குப்பெட்டியை திறந்து எண்ணி, மறைமுக தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது அறிவிக்கப்படும்.

இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய தலைவர் தேர்தல் தள்ளிவைப்பாதக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chairman election postponed by collector


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->