மத்திய அமைச்சர் மகன் மீண்டும் சிறையில் அடைப்பு.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், லக்கிம்பூர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவினரின் கார் மோதியதால் ஏற்பட்ட கலவரத்தின் போது 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிய வந்தது.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி இந்த கலவரத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு ஜாமீன் வழங்கியது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு வழங்கியுள்ள ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து கடந்த 18-ந்தேதி உத்தரவிட்டது.

மேலும், ஒரு வாரத்திற்குள் ஆஷிஷ் மிஸ்ரா சரணடைய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஆசிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் கெரி நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். இதனையடுத்து ஆசிஷ் மிஸ்ரா பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட சிறையில் உள்ள தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Minister Son surrender and jailed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->