அட மானங்கெட்ட சொரிநாய்.... காங்கிரஸ் பிரமுகரை காட்டமாக விமர்சனம் செய்த கார்ட்டூனிஸ்ட் பாலா.! - Seithipunal
Seithipunal


கார்ட்டூனிஸ்ட் பாலா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

"அட மானங்கெட்ட சொரிநாய் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு.. 

இளையராஜாவை இழிவு படுத்தி பேசிய உங்களின்  காணொளியை பார்த்ததும் இப்படிதான் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.. 

ஆனால் அது அரசியல் நாகரீகமாக இருக்காது என்பதாலும் ,  உங்களைப்போல் மூன்றாம்தர மொழி நடையை  பின் தொடர்வது அசிங்கம் என்பதாலும் .. 
மரியாதைக்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு.. என்று ஆரம்பிக்கிறேன்.. 

பஞ்சாயத்துக்கு வருவோம்.. 

இளையராஜா மோடி புத்தகத்திற்கு முன்னுரை எழுதிவிட்டார்.. அதில் அம்பேத்கரைப்போல் மோடியும்  என்று குறிப்பிட்டுவிட்டார்.. 

அந்த கருத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை.. ராஜா ரசிகர்கள் உட்பட பலருக்கும் இருக்காது.. ஆனால் ஜனநாயக நாட்டில் அந்த கருத்தை சொல்லும் உரிமை இளையராஜாவுக்கு உண்டு. 

உங்களிடமோ வேறு யாரிடமோ அனுமதி வாங்கிக் கொண்டுதான் ராஜா எந்த கருத்தையும் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.. 

அவர் கருத்தில் உங்களுக்கு விமர்சனம் இருந்தால் அந்த கருத்தை விமர்சிக்கலாம்.. முரண்படலாம்..

ஆனால் அந்த மேடையில் இளையராஜா குறித்து பேசிய உங்களின் வாயில் இருந்து வந்ததெல்லாம் நரகல்.. 
இளையராஜாவுக்கு வயசாகிவிட்டது.. 
ஆனால் இன்னும் இளையராஜா என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார் என்கிறீர்கள்.. 

இதை கேட்டபவர்கள்.. இந்த ஆளு லூசாய்யா என்று உங்களை நினைக்க மாட்டார்களா..

60 வயசுக்கு மேலான இளங்கோவன் , இளங்கோவன்னு பெயர் வச்சுக்கிட்டு இளையராஜாவை பார்த்து இன்னும் இளையராஜானு பெயர் வச்சுருக்காருனு சொல்றாரே.. இந்த ஆளு  குடிச்சுட்டு வந்து உளர்றான் என்று உங்களை போய் நினைத்துவிடுவார்களே என்று கவலையாக இருக்கிறது.. 

அடுத்து ஈ.வெ.ராமசாமியார் படத்திற்கு இசை அமைக்க மறுத்தார் இளையராஜா.. என்று கோபப்படுகிறீர்கள்.. 

ஆமா.. மறுப்பதும் ஏற்பதும் படைப்பாளியாக அவர் விருப்பம்.. அவர் மறுத்தது உண்மை எனில் அவரது நிலைப்பாடு சரியே. 

கூப்பிட்டதும் ஓடி வந்து இசை அமைத்து கொடுக்க அவர் ஒன்றும் உங்கள் பண்ணை அடிமை அல்ல.. 

இளையராஜாவை ஒழிக்கணும் என்கிறீர்கள்.. 

அதற்கு எளிமையான வழி இருக்கிறது.. உங்கள் காது பஞ்சராக வேண்டும்..

அப்புறம் ராஜா கஷ்டத்தில் இருந்தபோது கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்தார்.. இப்போது பணமும் புகழும் வந்ததும் அவர்கள் தங்களை  உயர்ந்த சாதி என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்று அவரையும் அவர் சமூகத்தாரையும் சொல்கிறீர்கள்.. 

ராஜாவின் கருத்துக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா.. 

ஆமா.. ராஜா உயர்ந்த சாதிதான்.. காலம் காலமாக உங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களாக  இருக்க இங்கு என்ன பாளையப்பட்டு  ஆட்சி முறையா நடக்கிறது..  

அதோடு ராஜா உயர்ந்த சாதியாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை.. 

எவனையும் விட தான் தாழ்ந்தவன் இல்லை என்று உயர்த்துவதுதானே சமூகநீதிப்பார்வை.. அது இளையராஜாவிடம் இருக்கிறது எனில் வரவேற்புகுரியதுதான்.

அப்புறம் உங்களுக்கு ஒரு வரலாற்று உண்மையை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.. 

உங்கள் முன்னோர்கள் பன்னிக் கூட்டமாக தமிழர்களின் நிலத்திற்குள் புகுந்து சூறையாடுவதற்கு முன்பு வரை இந்த நிலத்தின் ராஜாக்களாக செழிப்பாக  இருந்தவர்கள் தான் இன்று வீழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட என்ற பெயர்களில் இருக்கும் பல தமிழ் குடியினரும் ராஜாவின் முன்னோர்களும்.. 

இந்த நிலத்திற்குள் வர்ணாஸ்ரமத்தை புகுத்தி , அவர்களிடமிருந்த நிலத்தை பிடுங்கியதால்  அவர்கள் நிலமிழந்த கூலியாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்கிறது வரலாறு.. 

எல்லாவற்றையும் செய்துவிட்டு மீண்டும் அவர்களிடம் சாதி ஒழிப்பு பேசி அவர்களை உங்களின் கூட்டத்திற்கு அடியாளாக தொடர்ந்து வைத்திருக்க விரும்புகிறீர்கள்.. 

அதற்கு மாறாக இளையராஜா.. 'நான் ராஜா' என்று நிமிர்ந்து நிற்பதை பார்க்க  உங்களுக்கு எரிகிறது.. 

எரியட்டும்.. 

நேற்று இல்லை.. நாளை இல்லை..
ராஜா எப்பவும் ராஜாதான்.. 

"நீ மூடிட்டு இருடா இளங்கோவா.." என்றெல்லாம் சின்ன பசங்க யாராவது உங்களைப் பார்த்து சொல்லிவிடக்கூடாது என்பதும் கவலையாக இருக்கிறது.. 

புரிந்தால் சரி. 

-கார்ட்டூனிஸ்ட் பாலா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cartoonist Bala criticizes Congress leader evksL


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->