இந்து பக்தர்கள் குண்டர்களா.. இது அதிகார மமதையின் உச்சம்.. திமுகவை வெளுத்து வாங்கிய வானதி.!! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றாமல் உள்ளது. பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அரசு உதவுவது இல்லை. கோவை, மதுரையில் இருந்து பழனி செல்லும் பக்தர்களுக்கு 10 கி.மீ இடைவெளியில் இந்து அறநிலையத்துறை சார்பில் 24 மணி நேரம் தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும்.


திராவிட மாடல் அரசு, கோயில் வருமானத்தை பக்தர்களுக்கு செலவிடுவதைவிட்டு, பாஜகவினர் எந்தக் கோயிலுக்கு செல்கிறார்கள், அவர்கள் மீது எப்படி வழக்கு போடலாம் என்பதில் திமுக குறியாக உள்ளது. கோயில்களில் நாங்கள் புகுந்து அராஜகம் செய்வதாக அமைச்சர் சொல்கிறார். திராவிட மாடல் அரசால் மக்களை கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா? எல்.இ.டி திரையில் கும்பாபிஷேகத்தை பார்த்தால் கலவரத்தை தூண்டுவதாக ஆகிவிடுமா.? வயிற்று எரிச்சலில் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.


காழ்புணர்ச்சியால் இந்து பக்தர்களை குண்டர்கள் என அவமானப்படுத்துகிறார்கள். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். கோவையில்  பட்டாசு வெடித்ததற்கு, கோயில் சென்றதற்கு எல்லாம் வழக்கு போட்டு பாஜகவினர் 15 பேரை கைதுசெய்துள்ளனர். திமுக நிகழ்ச்சிகளுக்கு பட்டாசு வெடித்தால் கைதுசெய்து இருக்காங்களா? இது அதிகார மமதையின் உச்சம். இந்துக்களின் உணர்வை நசுக்க பார்க்கிறார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சொன்ன எதையுமே செய்யாத யூடர்ன் அரசாங்கம்" என விமர்சமண் செய்துள்ளார் வானதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjpmla vanathi srinivasan slams dmkgovt mkstalin


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->