அதிமுக கூட்டணியில் வெடிக்கும் சர்ச்சை.. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லையா? பாஜக வெளியிட்ட அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில நாட்கள் முன்பு எழுந்தது. அதன் பிறகு நடந்த பலகட்ட பேச்சுவார்த்தையின் பிறகு முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். 

இதையடுத்து, அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலைப்படுத்தி தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இதனிடையே, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாஜக, அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்க மறுக்கிறது. கூட்டணி கட்சிகள் சேர்ந்து தான் முதலமைச்சர் வேட்பாளர் முடிவு செய்யும் என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், கோயம்புத்தூரில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மனுதர்மம் என்பது பெண்களை இழிவு படுத்துகிறது. பாஜக மனுதர்மத்தை பின்பற்றுகின்றதா? என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் விமர்சனம் செய்து வருகிறது. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. திருமாவளவன் அரசியலுக்காக மனுதர்ம நூலை வைத்து பேசுகிறார். 

பெண்கள் குறித்து காலத்திற்கு ஒவ்வாமல் எழுதி வைத்திருப்பது பெண்களுக்கு தேவையில்லை. பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமாக நடமாடுவதற்கு சமூகம், பாதுகாப்பு போன்றவற்றை தேவை. குஷ்புவுக்கு பதவி வழங்காமல் இருப்பதற்கு பெரியாரிஸ்ட் என்று சொன்னது காரணம் இல்லை. குஷ்புவுக்கு கூடிய விரைவில் காட்சியில் அங்கீகாரம் கிடைக்கும். கட்சிப் பொறுப்பு எதுவும் இல்லை என்றாலும் அவரை போராட்டங்களுக்கு தலைமை ஏற்க பாஜக அனுப்புகின்றது. 

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமையாக அதிமுக இருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது கூட்டணி உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. அதிமுக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை நடத்தி இருந்தால் கூட்டணியின் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தெளிவாக முடிவு கிடைத்திருக்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp vanathi srinivasan says about admk alliance cm candidate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->