ஓபிஎஸ் தரப்பினருக்கு நெருக்கடி... வேட்பாளரை திரும்ப பெற பாஜக வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவின் தமிழகத்திற்கான மேல் இட பொறுப்பாளர் சி.டி ரவி ஆகியோர் நேற்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி அதிமுகவின் இரு அணிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதை பாஜக விரும்புவதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே சமூக வலைதளத்தில் கருத்து மோதல் உண்டானது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் "பாஜக ஆரம்ப முதலே திமுகவுக்கு எதிராக வலுவான வேட்பாளராக ஒற்றை வேட்பாளரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வேட்பாளரை அறிவிக்க போவதாக தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். அதேபோன்று அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் வேட்பாளரை அறிவிக்க போவதாக என்னிடம் தகவல் தெரிவித்தார்.

 

இதனை தொடர்ந்து நான் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அவர்களின் அறிவுறுத்தலின்படி எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேற்று சந்தித்து பாஜகவின் நிலைப்பாடு குறித்து தெளிவு படுத்தினோம். அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வம்ஜஅவர்களையும் சந்தித்து பாஜகவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம். 

திமுகவுக்கு எதிராக வலுவான வேட்பாளர் என்ற முறையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவை ஆதரிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வேட்பாளரை வாபஸ் பெறுமாறு பாஜக சார்பில் வலியுறுத்தினோம்.

அதற்கு அவர் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக தெரிவித்து இருந்தார். பாஜகவின் நிலைப்பாடு திமுகவிற்கு எதிராக வலுவான வேட்பாளரை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே ஆகும்" என செய்தியாளர்கள் சந்திப்பில்  ஓபிஎஸ் சந்திப்பு குறித்து அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP urges to withdraw OPS party candidate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->