காலை உணவு திட்டம் முதல் ரூ.450க்கு கேஸ் சிலிண்டர் வரை.!! வாக்குறுதிகளை வாரி வழங்கிய பாஜக.!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தில் தற்போது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி தக்க வைக்கும் நோக்கில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

1) ஏழை குடும்பங்களுக்கு 450 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.

2) ஏழைப் பெண்களுக்கு பட்டம் மேற்படிப்பு வரை இலவச கல்வி.

3) நெல் குவிண்டாலுக்கு 3500 ரூபாய் வரையும், கோதுமைக்கு 2700 வரையும் ஆதார விலை வழங்கப்படும்

4) தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

5) ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி.

6) மத்திய பிரதேசத்தில் ஐஐடி போன்று தொழில்நுட்ப மையம், எய்ம்ஸ் போன்ற அறிவியல் மையம் ஏற்படுத்தப்படும்.

7) பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் போன்று முதல்வர் ஜன் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

8) மத்திய பிரதேச அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும்.

9) பழங்குடியின மக்கள் அதிகாரம் பெற 3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் போனற வாக்குறுதிகளை வாரி வழங்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP release Madhya Pradesh election promise


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->