பாஜக நயினார் நாகேந்திரன் வாரிசுக்கு பாஜகவில் திடீர் பொறுப்பு!
BJP Nayinar nakendran son BJP Posting
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தனது மகன் நயினார் பாலாஜியை மாநில பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் அமைப்பாளராக நியமித்துள்ளார்.
இதனுடன், மொத்தம் 25 அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தும் அறிவித்துள்ளார்.
அதன்படி, வழக்கறிஞர் பிரிவின் அமைப்பாளராக குமரகுரு, தொழில்துறை வல்லுநர்கள் பிரிவுக்கு சுந்தர் ராமன், மருத்துவப் பிரிவுக்கு பிரேம்குமார், தொழிற் பிரிவுக்கு பாலகிருஷ்ணன், கலை மற்றும் கலாச்சாரப் பிரிவுக்கு பெப்சி சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மீனவர் பிரிவுக்கு சீமா, கல்வியாளர் பிரிவுக்கு நந்தகுமார், நெசவாளர் பிரிவுக்கு செல்வராஜ் மற்றும் அண்ணாதுரை, படைவீரர்கள் பிரிவுக்கு கர்னல் ராமன் உள்ளிட்டோர் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் மூலம், மாநில அளவில் பாஜக கட்சியின் பல்வேறு பிரிவுகள் வலுப்பெறுவதாகவும், ஒவ்வொரு துறையிலும் சிறப்பான ஒருங்கிணைப்பு அமையும் எனவும் கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது.
English Summary
BJP Nayinar nakendran son BJP Posting