அதிர்ச்சி வீடியோ! திமுக அரசின் அலட்சியத்தால் தாம்பரத்தில் ஒரு அப்பாவியின் உயிர் பலி! கொந்தளிக்கும் நயினார்! - Seithipunal
Seithipunal


பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுக அரசின் அலட்சியத்தால் தாம்பரத்தில் ஒரு அப்பாவியின் உயிர் பலி! இந்த மனிதாபிமானமற்ற ஆட்சி முடிவுக்கு வருவதற்குள் இன்னும் எத்தனை உயிர் பலிகளை தமிழகம் தர வேண்டும்?

சென்னை அருகே தாம்பரத்தில் கடைக்குச் சென்ற அஸ்வின் என்ற 35 வயது இளைஞர் மின்சாரக் கம்பத்தில் இருந்த ஒயர் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்களையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

கடந்த நான்காண்டுகளாக முறையாக பராமரிப்பின்றி கிடக்கும் மின் கம்பங்களால் ஏற்படும் விபத்துகளும், உயிர் பலிகளும் அதிகரித்து வருகின்றன. ஆளும் திமுக அரசின் அலட்சியத்தால் இதுபோன்ற அகால மரணங்கள் தொடர்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம். அனைத்து உயிர்களும் விலைமதிப்பற்றது.

எனவே, இன்னும் சில வாரங்களில் பருவ மழைக்காலம் துவங்க இருப்பதால், தமிழகத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பங்களை சரி செய்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென முதல்வர் முக ஸ்டாலினை  கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Nayinar nakendran condemn to DMK Govt MK Stalin thambaram accident video


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->