பள்ளி கழிவறையை கையால் சுத்தம் செய்யும் பாஜக எம்.பி.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பள்ளி கழிவறை ஒன்று சுகாதாரமற்ற முறையில் இருந்ததை கண்ட பாஜக எம்.பி வெறும் கைகளால் சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி ஜனார்த்தன் மிஸ்ரா. இவர் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட அரசு பெண்கள் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், அதன் பின்னர் அங்கு பள்ளி கழிவறை சுத்தம் செய்யாமல், அசுத்தமாக இருப்பதை கண்டார். இதனையடுத்து உடனே பள்ளி கழிவறையை அவர் தன்னுடைய கையால் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். 

தற்போது இது குறித்த இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாஜக எம்.பி-யின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP clean bathroom by hand video viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->