தீர்மானம், வெளிநடப்பு, வெள்ளை அறிக்கை, தனித்து நிற்கும் பாஜக., தமிழக அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை அரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தான் இலக்கு என கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து அவர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்துள்ளார்.

இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக சார்பாக இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற வானதி சீனிவாசன் எம்எல்ஏ வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், 

'மத்திய அரசால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்பட்ட நீட்தேர்வு' என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வு வந்த வரலாறு என்பது பல்வேறு ஆண்டு விவாதிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ பாரதிய ஜனதா கட்சியின் உடைய செயல் திட்டத்தில் இருந்தும், அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக உருவாக்கப்படவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதே 2003 லிருந்து தொடங்கப்பட்ட இந்த முயற்சிகள் அனைத்தும் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுதான். இப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுக்க நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

'நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிராக உள்ளது' என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டார்கள்., தமிழகத்தில் சமூகநீதி இடஒதுக்கீடு அடிப்படையில் அமைக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டின் படி தமிழகத்தில் 69 சதவிகித  உள்ளது. அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. 

2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதுக்கீட்டு இடங்களை விட அதிகமான இடங்களை இந்த குழந்தைகள் பெற்று இருக்கிறார்கள். மிகவும் பிற்பட்ட மாணவர்களும் இட ஒதுக்கீடு பெறும் அளவைவிட அதிகமாக எண்ணிக்கையில் பெற்றிருக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டுக்கு நீட் தேர்வினால் பாதிக்கப்படுகிறது என்பது முழுக்க 100 சதவீத பொய். இங்கு இருக்கக்கூடிய தரவுகளை வைத்து இட ஒதுக்கீடு நீட் தேர்வினால் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சமூகநீதிக்கு எதிராக நீட் தேர்வு இல்லை.

நாமக்கல்லில் சுவாமி விவேகானந்தா மெடிக்கல் காலேஜ், சென்ட் பீட்டர் மெடிக்கல் காலேஜ் கிருஷ்ணகிரி, அருணை மெடிக்கல் காலேஜ் திருவண்ணாமலை, கடந்த வருடம் பணிமலர் மெடிகல் காலேஜ் சென்னை, இந்திரா மெடிகல் காலேஜ் திருவள்ளூர் என நிறைய தனியார் மருத்துவக் கல்லூரிகள்.., இந்தப் பட்டியலில் நிறைய உள்ளது.

இந்த கல்லூரிகளை யார் யார் நடத்துகிறார்கள் என்பதை நீங்கள் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.. இவர்கள் கட்டணக் கொள்ளை அடிப்பதற்காக வே நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர். 

தமிழகத்தைப் பொருத்தவரை நீட் தேர்வால் தனியார் மருத்துவ கல்லூரிகள் எந்த வரையறையும் இல்லாமல் கட்டணக் கொள்ளையை தடுத்து உள்ளது. அரசாங்கம் குறிப்பிட்ட விகிதத்தில் தான் கட்டணத்தை வாங்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. 

நீட் தேர்வு இல்லாத காலத்தில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் எததனை பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்கள், தற்போது எத்தனை பேர் சேர்க்கிறார்கள் என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். 

நீட் தேர்வில் கோச்சிங் போனால்தான் அந்த தேர்வை வெற்றி பெற முடியும் என்பதை தமிழகத்திலும் பல்வேறு மாணவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். பழங்குடியினத்தைசேர்ந்த மாணவி எந்த நீட் கோச்சிங் சென்டர் போகாமல் நீட் தேர்வில் அட்மிஷன் வாங்கியுள்ளார்.

மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக யாரும் அமைய வேண்டாம் என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தோழமைக் கட்சிகளும், இந்த நீட் தேர்வு வேண்டாம் என கூறும் அத்தனை அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம்.  

கடந்த வருடங்களில் சிறிது சிறிதாக மாணவர்களும் பெற்றோர்களும் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்ற பொழுது., மீண்டும் இந்த நேரத்தில் இன்னொரு உணர்ச்சி அரசியலை தொடங்க வேண்டாம் என்றும் அரசியல் காட்சிகளை கேட்டு கொள்கிறோம்" என்று அந்தச்செய்தியாளர் சந்திப்பில் பாஜக எம்எல்ஏ வானதி தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA NAANATHI SAY ABOUT NEET EXAM


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->