தமிழக பாஜகவில் கோஷ்டி மோதலா? எல்.முருகனை ஓரங்கட்டி விட்டு அண்ணாமலைக்கு முக்கியத்துவம்! - Seithipunal
Seithipunal


காசியில் நடைபெற்ற தமிழ் சங்கமம் விழா மூலம் தமிழகத்தையும் வட இந்தியாவையும் இணைக்கும் முயற்சியில் பாஜக நடத்தி வருகிறது. இந்த விழாவில் தமிழகத்திலிருந்து 2500 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து மாணவர்களை காசிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களை அழைத்துச் செல்வதிலிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று செய்து கொடுத்தார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கும் சென்னையில் உள்ள பல பல்கலைக்கழகத்திற்கும் இடையே போட்டி நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த போட்டி நிகழ்ச்சிக்கு தமிழக பொறுப்பாளராக எல். முருகன் நியமிக்கப்பட உள்ளார். 

இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தலைமை முழு ஆதரவு அளித்து வருகிறது. சமீபகாலமாக அண்ணாமலைக்கும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல் வந்து விடக்கூடாது என்பதற்காக எல்.முருகனுக்கு பல பொறுப்புகளை வழங்கி அவரை பிசியாக வைக்க பாஜக தலைமை நினைக்கிறது என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Keeping aside Murugan and important given to Annamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->