பாஜக வேட்பாளராக களமிறங்கிய பிரபல நடிகை! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலில் புனே மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக இந்தி நடிகை மாதுரி தீட்சித் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை கைபற்ற முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது அதேசமயம் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸூம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

திரை துறை பிரபலமானவர்களை களம் இறங்கி அதிக தொகுதிகளை பிடிக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதற்காக பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சில மாதங்களுக்கு முன்பு நாடுமுழுவதும் பல மாநிலங்களில் பிரபலங்களை சந்தித்து பேசினார். 

பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித்தை மும்பையில் அமித் ஷா சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக வரும் மக்களவை தேர்தலில் புனே தொகுதியில் மாதுரி தீட்சித் போட்டியிட செய்ய பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

English Summary

bjp join in famous actress


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal